Latestமலேசியா

கடலில் குதித்த இளம்பெண்ணை காப்பாற்றிய மீனவர்கள்!

பினாங்கு, மார்ச் 2- பிறையில் இருந்து ஜார்ஜ் டாவுனுக்குச் செல்லும் வழியில் பினாங்கின் முதலாவது பாலத்திலிருந்து கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற 22 வயது இளம் பெண்ணை, மீனவர்கள் காப்பாற்றி கரைசேர்த்தனர்.

இச்சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் பினாங்கு பாலத்தின் 6 ஆவது கிலோ மீட்டரில் நடந்தது.  மோட்டார் சைக்கிளில் அந்த இடத்திற்கு வந்த அந்த இளம் பெண் அந்த மோட்டார் சைக்கிளை பாலத்தின் ஓரத்தில் நிறுத்தி வைத்து விட்டு, பின்னர் கடலில் குதித்தார்.

அந்தப் பெண்மணி கடலில் குதித்து தத்தளித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அவரைக் காப்பாற்றினர்.

பின்னர் இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பெண்ணிடம் போலீசார் விசாரித்தபோது அவர் கடும் மன உளைச்சல் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக ஒப்புக் கொண்டார்.

தன்னுடைய கணவர் போதைப் பொருள் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு நிவாரண மையத்தில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தாம் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக அந்தப் பெண் கூறினார். இதனிடையே பினாங்கு மருத்துவமனையில் அந்தப் பெண் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker