Latestமலேசியா

செமினி தேர்தல்: ரோஸ்மாவின் பதாகை ஏற்படுத்திய சர்ச்சை!

செமினி, மார்ச், 2- செமினி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்களிப்பு தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சின்னச் சின்னச் சச்சரவுகளும் புகார்களும் குற்றச் சாட்டுக்களும் பரவலாகி வருகின்றன.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் வாகனங்கள் மற்றும் தேர்தல் பிரசாரங்கள் நடப்பதாக தேசிய முன்னணி குற்றஞ்சாட்டு வருகிறது.

அதேவேளையில் இங்கு வைக்கப்பட்டுள்ள பதாகை ஒன்று கடும் சர்ச்சைகளைக் கிளப்பி உள்ளது. முன்னாள் பிரதமர் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மற்றிய பதாகைதான் அது.

“யார் போஸ்? நான் தான் போஸ்” என்று அவர் கூறுவதைப் போன்று பதாகை வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பதாகையை அகற்றுவதற்கு தேர்தல் அதிகாரிகள் முயன்றதாகவும் ஆனால் குறிப்பிட்ட கட்சி ஒன்றின் ஆதரவாளர்கள் அதனைத் தடுத்து விட்டதாகவும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

வாக்களிப்பு தொடங்கிவிட்ட நிலையில் இன்னமும் பக்காத்தான் ஹராப்பானும் தேசிய முன்னணியும் தொடர்ந்து வாக்குச் சவாடிகளுக்கு வெளியே தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர் என்று மலேசிய சோசலிஸக் கட்சியான பி.எஸ்.எம் குற்றஞ்சாட்டியது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker