Latestமலேசியா

போலீஸ் முறைகேடுகளை எம்ஏசிசி விசாரிக்குமா? -எம்.பி.

கோலாலம்பூர், மார்ச் 2 -15 போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட முறைகேடு மற்றும் ஊழல் வழக்குகளை ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரிக்க வேண்டுமென கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் கேட்டுக் கொண்டார்.

தாம் எம்ஏசிசி தலையகத்துக்குச் சென்று மகஜர் ஒன்றினைத் தாக்கல் செய்ததாகவும் அதில், ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள போலீஸைச் சேர்ந்த டிசிபி, எஸ்ஏசி மற்றும் பல நிலைகளிலும் உள்ள போலீசாரின் பட்டியலை ஒப்படைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அந்தப் பட்டியலில் கடந்தாண்டு செப்டம்பர் 8 -இல், முதலீட்டாளர் ஒருவரின் அடுக்குமாடி வீட்டை போதைப்பொருள் போலீசார் சோதனையிட்ட பின்னர், அவ்வீட்டிலிருந்து 79 லட்சம் ரிங்கிட் காணாமல் போனது தொடர்பான புகாரும் அடங்கும்.

சரவாக் சரிக்கேயில் கழிவறையில் பெண்ணொருவர் கற்பழிக்கப்பட்டது, பதவி உயர்வு பெற புக்கிட் அமானில் உள்ள உயர்மட்ட போலீஸ் தலைவருக்கு சாதாரண போலீஸ்காரர் ஒருவர் லஞ்சம் கொடுத்தது போன்ற குற்றச்சாட்டுகளையும் தாம் தந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சில ஆண்டு காலமாகவே பாதிக்கப்பட்ட பொதுமக்கள், போலீஸ்காரர்கள் ஆகியோர் தமது அலுவலகத்தில் அம்மாதிரியான புகார்களைத் தெரிவித்து வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker