Latestமலேசியா

பேராவில் ஒரே சீரான கார்நிறுத்த கட்டணக் கூப்பன்; மக்கள்பெரும் வரவேற்பு

ஈப்போ, மார்ச்.3- பேராவிலுள்ள 15 மாவட்டங்களில் ஒரே  மாதிரியான கார் நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்படும் திட்டத்திற்கு 90 விழுக்காடு பேரா மக்களின் ஆதரவு
கிடைத்திருக்கிறது.

இந்தக் கட்டணம் 30 நிமிடத்திற்கு 30 காசுகள், ஒருமணி நேரத்திற்கு 60 காசுகள் மற்றும் ஒருநாள் முழுக்க கார் நிறுத்துவதற்கான கட்டணம் 4 ரிங்கிட் என ஏப்ரல் முதல் தேதியில் இருந்து பேராவில் அமல்படுத்தப்படவுள்ளது.

தற்போது மேற்கண்ட கட்டணமுறை ஈப்போ, தைப்பிங், மற்றும் பத்துகாஜா ஆகிய பகுதிகளில் மட்டும் தான் நடப்பில் உள்ளது. அடுத்த மாதம் தொடங்கி, இதர 12 மாவட்டங்களில் இதே மாதிரியான கட்டணத்தை கார்நிறுத்துவதற்கு செலுத்த வேண்டியிருக்கும்.

ஶ்ரீ மஞ்சோங், தெலுக் இந்தான், கோலக் கங்சார், கம்பார், கிரீக், பேரா தெங்கா மற்றும் தஞ்சோங் மாலிம் ஆகிய பல மாவட்டங்களில் கார்நிறுத்தக் கட்டணம் மணிக்கு 40 காசுகளாக இப்போது இருந்து வருகின்றன.

புதிதாக ஒரே தரநிலைப் படுத்தப்பட்ட கார் நிறுத்தக் கூப்பன் மற்றும் கட்டண முறைக்கு பேரா மக்களில் 90 விழுக்காட்டினர் ஆதரவு வழங்கியுள்ளனர் என்று இது குறித்த ஆய்வில் தெரிய வந்திருப்பதாக மாநில ஊராட்சித் துறைக்கு பொறுப்பான
ஆட்சிக் குழு உறுப்பினர் பால் யோங் கியோங் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker