Latestமலேசியா

சமூக ஊடகங்களில் அதிகரிக்கும் நஜீப்பின் செல்வாக்கு ; பக்காத்தனின் தோல்விக்கு இதுவே காரணம்!

கோலாலம்பூர், மார்ச் 4 – செமிஞ்சே இடைத்தேர்தலில் பக்காத்தனின் தோல்விக்கு சமூக ஊடகங்களே காரணமாக அமைந்திருக்கும் வேளையில், நஜீப் ரசாக்கின் செல்வாக்கு இணையத்தள வாசகர்களிடையே  கூடி வருவதாக போலிட்வீட் இணைய நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மற்ற கட்சிகளை விட அம்னோவின் பிரசாரமே முகநூலில் பரவலாகக் காணப்பட்டதாகவும், அது பக்காத்தானின் செயலாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் வெற்றியும் பெற்றிருப்பதாக போலிட்வீட்டின் தோற்றுநர் அகமட் கமால் நாவா சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் நம்பிக்கையைப் பெறுவதில் தோல்வி,  பிடிப்பான கொள்கைகளை வெளிப்படுத்தத் தவறியது, மக்களின் வாழ்க்கை நிலையில் மாற்றத்தைக் கொண்டு வருவதில் தோல்வி, விலைவாசியைக் கட்டுப்படுத்தத் தவறியது, அமைச்சர்களின் முரண்பாடான அறிவிப்புகள், தேர்தலின்போது கட்சிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாமை, அவற்றின் மெத்தனப் போக்கு போன்றவையே இந்த வீழ்ச்சிக்கான காரணம் என அவர் மேலும் கூறினார்

அம்னோ, பாஸ் கட்சியோடு இணைந்து பங்காற்றியதோடு மலாய்க்காரர்களின் உரிமை பறிபோய் விடும் என்ற அச்ச உணர்வை  பொதுமக்களிடம் ஏற்படுத்துவதில் வெற்றி கண்டதன் மூலம்,  70 விழுக்காட்டு மலாய்க்காரர்களின் ஆதரவு அம்னோவுக்குச் சாதகமாக மாறி வருகிறது.

ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள பக்காத்தான்,  பயனான கொள்கைகளை அறிவித்துச் செயலாற்றத் தவறினால், அடுத்த பொதுத்தேர்தலில் அக்கூட்டணி பெரும் சிக்கலை எதிர்நோக்கும் என்பதே உண்மையாகும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker