Latestமலேசியாவாழ்க்கை

தலைநகரில் வசிப்போருக்கு அரசு அறிவித்திருக்கும் குறைந்தபட்ச சம்பளம் போதாது !

கோலாலம்பூர், மார்ச் 4 – தலைநகரில் வாழ்க்கைச் செலவினம் அதிகளவில் உயர்ந்து வருவதால் அரசின் குறைந்தபட்ச சம்பளம் போதாது என பெலாஞ்சாவான் கூ (BelanjawanKu) எனும் ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் குடியிருக்கும் திருமணம் ஆகாத தனிநபருக்குக் குறைந்தது 1,870 ரிங்கிட்டும் திருமணம் ஆனவர்களுக்கு சாதாரண வாழ்க்கையை நடத்த மாதமொன்றுக்கு 4,420 ரிங்கிட்டும் தேவைப்படுவதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

தனிநபர்களும் திருமணமானவர்களும் தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சமூக நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளவும், சேமிக்கவும், கடன் பெறவும் அவசர காலங்களில் பயன்படுத்தவும் எவ்வளவு பணம் தேவையென அந்த ஆய்வு பரிந்துரைத்துள்ளது.

தலைநகரில்  ஒரு கார் வைத்திருக்கும் தனிநபருக்கு  1,870லிருந்து 2,490 ரிங்கிட்டும் ஒரு குழந்தையைக் கொண்டிருக்கும் தம்பதியருக்கு 5,730 ரிங்கிட்டும் இரு குழந்தைகளைக் கொண்டிருப்போருக்குக் குறைந்தது 6,620 ரிங்கிட்டும் தேவையென்று அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

அதே போன்று, வயதான தம்பதியர் தங்களது வாழ்க்கையை நடத்த குறைந்தது மாதமொன்றுக்கு 3,090 ரிங்கிட் கட்டாயம் தேவைப்படுவதாக அது குறிப்பிடுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker