Latestசினிமா

50 மில்லியன் டாலர் பணம் கேட்டு முன்னாள் மனைவி மீது பிரபல நடிகர் வழக்கு!

லாஸ் ஏஞ்சல்ஸ் , மார்ச். 4- தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக முன்னாள் மனைவியிடம் 50 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் ஹாலிவுட் நடிகர் ஜோனி டெப்.

பிரபல பாலிவுட் நடிகர் ஜோனி டெப் தன்னை அடித்துக் கொடுமைப் படுத்தியதாக அவரின் முன்னாள் மனைவியும் நடிகையுமான ஆம்பர் ஹெர்ட் புகார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி “தி வாஷிங்டன் போஸ்ட்”க்கு பேட்டி அளித்தார் அந்தப் பேட்டி தொடர்பாகஜோனி டெப்,  முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

தன்னைப் பற்றி பொய்ப் புகார் தெரிவித்த ஆம்பர் ஹெர்டிடம் 50 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.  கடன் பிரச்சனையில் இருக்கும் நிலையில் ஜோனி டெப், இந்த வழக்கு தொடுத்து இருப்பது பரவலாக விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

ஆம்பர் ஹெர்ட்டை துன்புறுத்தியதே இல்லை. ஜோனி டெப் மீது ஹெர்ட்  கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். ஹெர்ட்டுக்கு மக்கள் மத்தியில் நல்ல எண்ணம் ஏற்படவும் அவரின் தொழிலை வலுப்படுத்திக் கொள்ளவும் இது போன்ற புகாரை தெரிவித்து உள்ளார் என்று ஜோனி டெப்பின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதேவேளையில்  முன்னாள் மனைவியின் ஆம்பர் வாயை அடைக்கவே டெப் இப்படி ஒரு நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால் அவர் அமைதி காக்க மாட்டார். டெப்பால் உண்மையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று ஹெர்ட்டின் வழக்கறிஞர் பதிலடி கொடுத்துள்ளார்.

2011ஆம் ஆண்டு “தி ரம் டைரி” படத்தில் நடிக்கும் போது காதலில் விழுந்த ஜோனி டெப்பும் (வயது 55) மற்றும் ஆம்பர் ஹெர்ட்டும் (வயது 32)   2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2016ஆம் ஆண்டு மே மாதம் பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker