Latestஉலகம்

இளவரசிகளை ஆபாசமாக விமர்சிக்கும் இணைய தளங்கள்! அரச குடும்பம் ஆத்திரம்!

லண்டன், மார்ச்.5- பிரிட்டன் இளவரசிகளை இணையதள பக்கத்தில் ஆபாசமாக விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு அதற்கான புதிய விதிகளையும் அரண்மனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

கடந்த ஆண்டின் இறுதியில் இருந்தே பிரிட்டன் இளவரசிகள் மேகன் மற்றும் கேத்தை இணையதளவாசிகள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

இருவரின் ரசிகர்களும் சண்டை போடும் விதமாக ஒருவரையொருவர் ஆபாசமாக திட்டிக்கொள்கின்றனர். அரண்மனையின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் நடைபெற்று வரும் இது போன்ற தாக்குதல்களை தடுக்க இவ்வாண்டின் ஆரம்ப முதலே ஒரு குழு நியமிக்கப்பட்டது. 

ஆபாசமாக கருத்து பதிவிட்டவர்களின் கருத்துகளை முடக்கம் செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அது குறையாமல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இளவரசிகளுக்கு கொலை மிரட்டல், நிறவெறியுடன் கருத்து பரிமாற்றம், பாலியல் ரீதியாக தாக்குதல் போன்ற வேலைகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் அரண்மனை நிர்வாகம் ஒரு புதிய நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளது. 

பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் கிளாரன்ஸ் ஹவுஸ் போன்ற டுவிட்டர் கணக்குகளில் தவறான கருத்து பதிவீடுகளை முடக்கம் செய்வதுடன் போலீஸ் புகாரும் அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker