Latestமலேசியா

டான்ஶ்ரீ நடராஜா வீடு – கோயிலில் எம்ஏசிசி அதிரடி சோதனை; முக்கிய புள்ளி கைதா?

கோலாலம்பூர், மார்ச், 5 – கோலாலம்பூர் ஶ்ரீமகா மாரியம்மன் ஆலயத் தேவஸ்தானத்தின் தலைவரான டான்ஶ்ரீ நடராஜாவின் இல்லத்தில் நேற்றிரவு 7:45 மணியளவில் அதிரடிச் சோதனை நடத்திய மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்.ஏ.சி.சி) அதிகாரிகள், பத்துமலை ஶ்ரீசுப்பரமணியம் ஆலய கமிட்டி உறுப்பினர்கள் சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோத்தா டமான்சாரவிலுள்ள டான்ஶ்ரீ நடராஜாவின் இல்லத்தில் எம்.ஏ.சி.சி சோதனை நடத்திய அதேவேளையில் பத்துமலை கோயில் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

இவ்விரு இடங்களிலும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.  கோயில் நிர்வாகத்தில் சம்பந்தப்பட்ட முக்கியஸ்தர் ஒருவர் கைது செய்யப் பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால், அவர் யார் என்பது பற்றி அடையாளம் கூறப்படவில்லை. இன்று சம்பந்தப்பட்ட அவர் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்க, நீதிமன்ற அனுமதியை எம்.ஏ.சி.சி பெறக்கூடும் என்று கூறப்பட்டாலும் அந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதனிடையே பத்துமலை கோயில் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் சிலரிடம் எம் ஏ.சி.சி. வாக்குமூலம் பதிவு செய்வதில் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

கோயில் நிர்வாகச் செயலாளர் சேதுபதியையும் எம்.ஏ.சி.சி. வாக்கு மூலப் பதிவுக்காக இன்று அழைத்து இருப்பதாக கோயில் வட்டாரங்கள் கூறுகின்றன.

நில விவகாரம் தொடர்பிலான புகாரின் அடிப்படையில் டான்ஶ்ரீ நடராஜா மற்றும் கோவில் அதிகாரிகளுக்கு எதிராக எம்.ஏ.சி.சி.  இந்த நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதாக நம்பப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker