Latestஉலகம்

புல்வாமா தாக்குதல்: திரைப்படமாக்க பல தரப்புகள் முயற்சி!

மும்பை, மார்ச்.5- உலக நாடுகள் கவனத்தை ஈர்த்த  காஷ்மீர் புல்வாமா தாக்குதல்மற்றும் அது தொடர்பான சம்பவங்கள் திரைப்படமாக்கப் படவுள்ளன.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 இந்திய துணை ராணுவத்தினர் இறந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் மீது இந்நிய விமான படையினர் குண்டு வீசி யது.

புல்வாமா தாக்குதலிருந்து அபிநந்தனை விடுவித்தது வரையிலான  சம்பவங்கள் உலக நாடுகள் கவனத்தை ஈர்த்ததால் அதை படமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படத்தை எடுக்கின்றனர். இதில் நடிக்க நடிகர் நடிகை தேர்வு நடக்கிறது. அக்ஷய்குமார், ஹிருத்திக் ரோஷன், ஷாருக்கான் ஆகியோர் பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர்.

இப்படத்துக்கு “சர்ஜிக்கால் ஸ்டிரைக் 2.0” என்ற பெயர் உள்பட பல பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழிலும் அபிநந்தன் சம்பவத்தை படமாக்க முயற்சி நடக்கிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker