Latestமலேசியா

அம்னோ-பாஸ் கூட்டுறவு: எங்களுக்கு பிரச்சினை இல்லை! -மஇகா

கோலாலம்பூர், மார்ச். 6- அம்னோ-பாஸ் கட்சியோடு இணைந்து செயல்பட உடன்பாடு கண்டிருப்பது மஇகாவுக்கு எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தாது என அதன் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இது அரசியலில் புதுமை இல்லை. இதற்கு முன்னர் ஜசெக, பிகேஆர் கூட்டணி மலாய் மற்றும் முஸ்லிம் விவகாரங்களை முன்னெடுக்கும் பிரிபூமி பெர்சத்து மற்றும் அமானா நெகாரா ஆகிய கட்சிகளோடு கூட்டணியில் இணைந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

பாஸ் கட்சியோடு அம்னோ தேர்தல் கூட்டணியை ஏற்படுத்தி இருப்பதால், மஇகா அதைக் கண்டு அச்சப்பட எதுவுமில்லை என்றும் தேசிய முன்னணி அதன் மூலம் பலனடைய இருப்பதால், அதனை தாம் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் நஸ்ரி அஸிஸின் இனவாதப் பேச்சினால் அதிருப்தியுற்ற மசீசவும் மஇகாவும் புதிய கூட்டணியை உருவாக்கப் போவதாக அறிவித்த இரண்டு நாள்களுக்குப் பின்னர், விக்னேஸ்வரன் இந்த அறிவிப்பைச் செய்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker