Latestமலேசியா

‘உப்பின் & இப்பின்’ கதாபாத்திரம்: 10 ஆண்டுக்கு பின் திரைப்படமாக வெளியீடு! (VIDEO)

கோலாலம்பூர், பிப்.6 – தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘உப்பின் & இப்பின்’ (Upin & Ipin) கதாபாத்திரங்களைக் கொண்ட அனிமேஷன் கேளிக்கை தொடர், 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் வெள்ளித் திரையில் வெளியீடு காண்கிறது.

'Upin & Ipin : The Lone Gibbon Kris'

'Upin & Ipin : The Lone Gibbon Kris''உப்பின் & இப்பின்' கதாபாத்திரம்: 10 ஆண்டுக்கு பின் திரைப்படமாக வெளியீடு!

Posted by Vanakkam Malaysia on Wednesday, 6 March 2019

மூன்று மலாய் அனிமேஷன் தொடர் கதைகளின் இயக்குனர்களான அடாம் அமிருடின், சைட் நூர்ஃபைஷ் மற்றும் அகமட் ரசூரி ஆகியோரின் கைவண்ணத்தில் ‘Upin & Ipin The Lone Gibbon Kris’ என்ற இந்த அனிமேஷன் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நேற்று, மிட்வெலி திரையரங்கில் நடைபெற்ற சிறப்புக் காட்சியை தொடக்கி வைத்த கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் கண்டு களித்தார்.

நம் நாட்டின் மலாய்த் திரைப்படங்களை அனைத்துலக சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும். அப்போது தான் மலாய் மொழியையும் நமது கலாசாரத்தையும் வெளிநாடுகளில் பரப்புவதற்கு நமக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று கல்வி அமைச்சர் மஸ்லீ தெரிவித்தார்.

இந்தத் திரைப்படம், 5 வருட உழைப்பிற்கு பின்னர், எதிர்வரும் 21 மார்ச் மாதம் வெளியீடு காணவுள்ளது. ‘ Upin & Ipin The Lone Gibbon Kris’ என்ற திரைப்படம் மொத்தம் 20 மில்லியன் ரிங்கிட் செலவில் தயாரிக்கப்பட்டதாக படத்தைத் தயாரித்துள்ள ‘Les’ Copaque’ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இத்திரைப்படம் பள்ளி விடுமுறை நாட்களில் வெளியீடு காண்பதால் மாணவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமையும் என்று என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker