Latestமலேசியா

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது ரயில் மோதல்: கோமாவில் சிறுவன்!

கோத்தாபாரு, மார்ச்,6- ரயில் தண்டவாளத்தை தாண்ட முயன்றபோது ரயில் மோதியதால் காயமடைந்த 9 வயதுச் சிறுவன் சுயநினைவை இழந்து ‘கோமா’வில் இருந்து வருகிறான்.

இந்தச் சம்பவம் பாசீர் மாஸ், தோக் உபான் என்ற இடத்தில் நேற்று மாலையில் நடந்தது. ஆரம்பப்பள்ளி மாணவனான முகம்மட் அமிருள் ஹக்கிமி என்ற அந்தச் சிறுவன், தன்னுடைய சைக்கிளைத் தள்ளிக் கொண்டே ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது இந்த விபத்து நடந்தது.

தானா மேராவில் இருந்து தும்பாட்டை நோக்கி இந்த ரயில் சென்று கொண்டிருந்தத போது சைக்கிளின் பின்புற சக்கரத்தில் ரயில் மோதியதால் முகம்மட் அமிருள் தூக்கி வீசப்பட்டு கடுமையாகக் காயமடைந்தான்.

தன்னுடைய பள்ளியில் நடந்த சமய வகுப்பு முடிந்து முகம்மட் அமிருள் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாகவும் பாசீர் மாஸ் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல்லா பியா கூறினார்.

கடுமையான காயம் காரணமாக சுயநினைவை இழந்த முகம்மட் அமிருள் கோலக் கிரியான் மருத்துவமனையில் கோமா நிலையில் இருந்து வருகிறான்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker