Latestமலேசியா

நடன ஆசான் ரவி ஷங்கருக்கு கண்ணீருடன் விடைகொடுத்தது கலையுலகம்!

கோலாலம்பூர்,மார்ச் 6 – இந்திய பாரம்பரிய நடனத்தை, ‘ஃப்யூஷன்’ இசையில் அதன் அழகியல் தன்மை மாறாமல் ஆடலாம் என்பதனை மலேசிய கலையுலகிற்கு காட்டிய அஸ்தானா ஆர்ட்ஸ் ரவி ஷங்கரின் நல்லுடலுக்கு ஏராளமான கலைஞர்களும் அவருடைய நடன மாணவிகளும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்திருந்த நிலையில், நேற்றிரவு 11.30 மணியளவில் காலமானார். அவர் மறைந்த செய்தி மலேசிய கலைஞர்களையும் அஸ்தானா ஆர்ட்ஸ் ரசிகர்களையும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.


……….
அவருடைய நல்லுடல் பிரிக்பீல்ட்ஸிலுள்ள அஸ்தானா ஆர்ட்ஸ் நடனப்பள்ளியில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, இறுதி மரியாதை செலுத்தப்பட்ட பின்னர் இன்று மதியம் 3 மணிக்கு செராஸ் தகன மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. மேல் விபரங்களைக் காணொளிச் செய்தியில் காண்க:

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker