Latestமலேசியா

மாடல் அழகி இவானாவின் மரண விசாரணை: அடுத்த வாரம் முடிவு!

கோலாலம்பூர், மார்ச். 6 – ஹாலந்து மாடல் அழகி இவானா ஸ்மித் என்பவர் அடுக்குமாடி வீட்டிலிருந்து விழுந்து மரணமடைந்ததை விசாரணை செய்யும் மரண விசாரணையில் நீதி கிடைக்க வேண்டுமென அவரது குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

அந்த விசாரணையின் முடிவை, மரண விசாரணை நீதிபதி மாயோன் தாலில், ஜாலான் டுத்தா நீதிமன்றத்தில் வெள்ளிக் கிழமையன்று வெளியிடுவார். அதில், துரதிருஷ்டவசமாக திடீர் மரணம், திட்டமிடாத கொலை அல்லது காரணங்கள் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இவானா இறந்திருக்கலாம் என்ற முடிவுகளில் ஒன்று அறிவிக்கப்படும் என நம்பப்படுகிறது.

2017ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி, ஜாலான் டாங் வாங்கி கேப் ஸ்குவேர் ரெஸிடென்ஸ் அடுக்குமாடி வீட்டின் 20ஆவது மாடியில் இருந்து 6ஆவது மாடியின் பால்கனியில் விழுந்து ஸ்மித் (வயது 18) நிர்வாண நிலையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

இதற்கு முன்னர், திடீர் மரணம் என அறிவிக்கப்பட்ட அதில், ஸ்மித்தின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதைக் கண்டறிய 5 மாத காலம் மரண விசாரணை நடத்தப்பட்டது.

சம்பவம் நடந்த நாளன்று ஸ்மித், அலெக்ஸ் மற்றும் லூனா அல்மாஸ் ஆகியோருடன் தங்கி இருந்ததாகவும், அவர்கள் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தததோடு போதைப் பொருளையும் உட்கொண்டிருந்தனர் என சொல்லப்படுகிறது.

உடற்கூறு பரிசோதனையில், ஸ்மித்தின் உடலில் காணப்பட்ட தடயங்கள், சம்பவம் நடப்பதற்கு முன்னர் அம்மூவருக்கும் இடையே தகராறு மூண்டிருக்கலாம் என்றும் அதன் காரணமாக ஸ்மித் 20ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker