Latestஉலகம்

இந்தியா தாக்குதல்: பாக் உளவுத் துறையின் வேலை! -முஷராப்

இஸ்லாமாபாத், மார்ச். 7- இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவுத்துறை ஜெய்ஷ் தீவிரவாத அமைப்பை பயன்படுத்தியது என்ற அதிர்ச்சி தகவலை வெலியிட்டுள்ளார் முன்னாள் அதிபர் முஷராப்.

ஜம்மு கால்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த 14 ஆம் தேதி  இந்திய வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.  அதில் 44 வீரர்கள் பலியாகினர். இந்த கொடூரத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜய்ஷ் இ முகம்மது பயங்கரவாதம் இயக்கம் பொறுப்பேற்றது.

ஆனால் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் தங்கள் மண்ணில் இருந்து செயல்படவில்லை என்று பாகிஸ்தான் ராணுவம் கூறி வருகிறது.  ஆனால் இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவுத்துறை, இந்த ஜெய்ஷ் அமைப்பை பயன்படுத்தியது என முஷராப் அம்பலப்படுத்தி உள்ளார்.

ஜெய்ஷ் அமைப்பின் முகாம் மீது தாக்குதல் நடத்தியதை நான் வரவேற்கிறேன்.  அந்த அமைப்பு என்னை இரு முறை கொல்லப் பார்த்தது எ என்று அவர் சொன்னார்.

அப்போது செய்தியாளர் ஒருவர். நீங்கள்  பாகிஸ்தான் அதிபராக இருந்த போது ஏன் அந்த அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வில்லை? எனக் கேட்டார். அதற்கு ‘அப்போது சூழல் வேறு மாதிரி இருந்தது” என அவர் பதில் அளித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker