Latestஉலகம்

“எனக்கே தெரியாமல் நான் விற்கப்பட்டேன்!” கதறும் திருநங்கை! திடுக்கிடும் பின்னணி!

இஸ்லாமாபாத், மார்ச்.7 பாகிஸ்தானை சேர்ந்த திருநங்கை ஒருவர், தனக்கே தெரியாமல் சிலர் தன்னை சிலர் ரூ. 10 லட்சத்துக்கு விற்றுவிட்டதாக போலீசில் புகார் செய்தார்.

ஜீலும் மாநிலத்தை சேர்ந்தவர் நீலம். திருநங்கையான இவர் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். புகார் மனுவில்,  அன்வர் என்கிற மற்றொரு திருநங்கை என்னை சிலரிடம் ரூ. 10 லட்சத்துக்கு விற்று விட்டார். வாட்ஸ் ஆப் குரூப்பில் வந்த வீடியோ மூலமே இதை நான் தெரிந்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.

“எங்கள் பகுதியில் உள்ள திருநங்கைகள் அமைப்பை சேர்ந்த அன்வர், ஸ்டாம்ப் பேப்பரில் என்னுடைய கையெழுத்தை போலியாக போட்டு விட்டு என்னை விற்றுள்ளார். நான் விற்கப்பட்டதை அடுத்து சிலர் தினமும் என் வீட்டுக்கு வந்து என்னை கடத்த முயன்றனர்.

“என்னை போலவே நாகேயன் என்ற திருநங்கையும் சமீபத்தில் பணத்துக்காக விற்கப் பட்டுள்ளார். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று புகாரில் போலீசுக்கு அந்தப் புகாரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் இதில் தொடர்புடைய இருவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker