Latestமலேசியா

டான்ஶ்ரீ நடராஜா விடுவிப்பு! இதர 2 பேருக்கு நாளை வரை காவல் நீட்டிப்பு!

கோலாலம்பூர், மார்ச் 7 –   நில விவகாரத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஶ்ரீமகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான்ஶ்ரீ  நடராஜாவின் தடுப்புக் காவலை நீட்டிக்க மறுத்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம்,  அவரை பிணையில் விடுதலை செய்தது.

3 நாள் தடுப்புக் காவல் முடிவடைந்த பின்னர், மேலும் 7 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டுமென்ற ஊழல் தடுப்பு ஆணையம்  கோரிக்கையை முன்வைத்தது.

நடராஜாவைப் பிரதிநிதித்த வழக்கறிஞர் தேவநாதன், தமது கட்சிக்காரர் இந்த வழக்கில் தகுந்த ஒத்துழைப்பைத் தர இணங்கியிருப்பதால், அவரை பிணையில் விடுவிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

அதனை அடுத்து எம்ஏசிசியின்  கோரிக்கையை நிராகரித்த  மாஜிஸ்திரேட் நோரைஸா முகமட் யூசோப், அவரைப் பிணையில் விடுவித்ததோடு  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதர இருவருக்குமேலும் ஒரு நாளைக்கு மட்டுமே தடுப்புக் காவலை நீட்டித்து, உத்தரவிட்டார்.

ஆலயத்துக்குச் சொந்தமான நிலத்தில் மேம்பட்டுத் திட்டம் சம்பந்தமாக  இவர்கள் மூவரும் திங்கட்கிழமை முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker