Latestஉலகம்

பேச்சு தோல்வி: வட கொரியா ஆத்திரம்! மீண்டும் ஏவுகணைகள்!

பியாங் யோங், மார்ச்.7- அமெரிக்காவுடனான 2 ஆவது கட்ட பேச்சு வார்த்தை தோல்வியடைந்த நிலையில், ஆத்திரமடைந்துள்ள வடகொரியா, மீண்டும் ஏவுகணைச் சோதனைகளில் தீவிரம் காட்டி வருகிறது.

தனது முக்கிய ராக்கெட் ஏவுதளத்தை புனரமைக்கும் பணியில் அது துரிதமாக இறங்கியுள்ளது. வடகொரியா, தனது அணு அயுதங்களை முழுமையாக கைவிட்டு, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற வேண்டும் என அமெரிக்க வலியுறுத்தி வருகிறது.

அதற்குப் பிரதிபலனாக தங்கள் மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை முழுமையா அமெரிக்கா நீக்க வேண்டும் என வடகொரியா கோரிவந்தது.

கடந்த மாதம் இறுதியில் வியாட்னாமில் நடந்த இரண்டாவது உச்சநிலை மாநாட்டில் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசினர்.
இரு தரப்பினர் இடையே முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்த உடன்பாடும் எட்டாமல் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.

இதனால், அதிருப்தி அடைந்த வடகொரியா, இனி பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அணு ஆயுத விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்தது.

அதே சமயம் அணு ஆயுதங்களை வடகொரியா முழுமையாக கை விடாதவரை அந்நாட்டுக்கு எதிர்காலம் கிடையாது என அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக கூறினார். இந்நிலையில் அழிக்கப்படும் என வடகொரியா உறுதி அளித்திருந்த முக்கிய ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து மீண்டும் ஏவுகணைச் சோதனைகளை நடத்த அது தீவிரம் காட்டி வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker