Latestசினிமா

ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை, மார்ச்.7-  சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் வீட்டுக்கு வெடி குண்டு வைக்கப் பட்டிருப்பதாக  மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பில் சமப்ந்தப்பட்ட ஆசாமி அடையாளம் காணப்பட்டார்.

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 6 மணியளவில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் வீட்டிலும் இன்னும் சற்று நேரத்தில் குண்டு வெடிக்கப் போகிறது என தகவல் வந்தது.

இதையடுத்து போலீசார் உடனடியாக நடத்திய சோதனையில் அது பொய்யானது எனத் தெரிய வந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பேசிய அந்நபர், கோவையை சேர்ந்த இளைஞர் என்று தெரிய வந்தது.

அந்நபர் மன அழுத்தம் காரணமாக இம்மாதிரியான மிரட்டல் விடுத்ததாக என்று தெரிய வந்தது. இருப்பினும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker