Latestஇந்தியா

இரகசியங்களை பெற அபிநந்தன் சித்ரவதை; பாக் .பிடியில் பட்ட அவதி!

புதுடில்லி, மார்ச். 8- பாகிஸ்தான் பிடியில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் அனுபவித்த சித்ரவதை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அபிநந்தன் விவகாரத்தில் தகவல் அறிந்த பெயர் தெரிவிக்க விரும்பாத அரசு அதிகாரி பேசுகையில், சித்ரவதைகளை பட்டியலிட்டுள்ளார்.

இந்திய விமானப்படையின் நகர்வு, விமானங்கள் நிலை நிறுத்தம், குறியீடு எண்கள், தளவாடங்களின் ஏற்பாடு பற்றிய தகவல்களை பாகிஸ்தானிய அதிகாரிகள் கேட்டு துன்புறுத்தியுள்ளனர் என கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் உள்ளோம் என தெரிந்ததுமே ஆவணங்களை அழிக்க முயற்சி செய்துள்ளார் அபிநந்தன். விமானப்படையில் கொடுக்கப்படும் பயிற்சியின்படி தகவல்களை அவர் தெரிவிக்கவில்லை.

காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்ட போது அவர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை. அவரை நீண்ட நேரம் நிற்க வைத்து பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவின் இரகசியங்களைப் பெற முயன்றுள்ளனர். அவருடைய காதுகளுக்கு அருகே ஒலிபெருக்கிகளை அதிக சத்தத்தில் அலற விட்டுள்ளனர். தண்ணீரை மேலே ஊற்றி அடித்தும் துன்புறுத்தியுள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவத்தின் 4 குழுக்கள் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளது. பிடிபட்ட 24 மணி நேரத்தில் கொடூரமான விசாரித்துள்ளனர். அனைத்துலக நெருக்குதல் அதிகரிக்கத்தொடங்கியதும் பின்னர் தான் ஓரளவுக்கு விசாரணை முறை மாறியுள்ளது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker