Latestமலேசியா

சட்டவிரோத வணிகர்களால் உள்நாட்டினர் பாதிப்பு! -வர்த்தகர்கள் புகார் -(Video)

ஈப்போ, மார்ச். 8- ‘கார்னிவல்’ என்ற பெயரில் நடத்தப்படும்  தற்காலிக கடை வர்த்தகத்தால் உள்நாட்டு வணிகர்கள் தொடர்ந்து பாதிப்பை எதிர்நோக்கி  வருவது குறித்து  ஈப்போ லிட்டில்  இந்திய வணிகர்கள சங்கம் கவலைத் தெரிவித்துள்ளது.

சுமார் கடந்த 10 ஆண்டுகளுமாக இந்தப் பாதிப்பைத் தாங்கள் எதிர்நோக்கி வருவதாகவும் இதுபோன்ற கடைகளில் சட்டவிரோத தொழிலாளர்களின் அதிகரித்து விட்டதகவும்   அச்சங்கத்தின் தலைவர் கலா பாலசுப்பிரமணியம் கூறினார்.

ஈப்போ சுற்று வட்டாரத்தில் அவ்வப்போது நடத்தப்படும் இதுபோன்ற கார்னிவெல் நிகழ்வுகளால் இந்த பாதிப்பை எதிர்நோக்கியுள்ள வணிகர்கள் பலர் தங்களின் வர்த்தகத்தை தொடர முடியாமல்  கடைகளை மூடும்  நிலைக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த வகையில் ஈப்போ லிட்டில்  இந்தியா வளாகத்தில் ஜவுளி விற்பனையை செய்து வந்த பெரிய கடை  இந்த ஆண்டு தொடக்கத்தில் மூடப் பட்டுள்ளதை நினைவுக் கூர்ந்த அவர்,  மேலும் பல கடைகள் மூடும் அபாயத்தை எதிர்நோக்கி  உள்ளதாக அவர் தெரிவித்தார் .

குறிப்பாக,  இந்த கார்னிவெல் நிகழ்வுகளால் அதிகமாக ஜவுளி நிறுவனங்கள் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றன. அவர்களின்  நலனைக் கருத்தில் கொண்டு  அரசு உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும்  அவர் வலியுறுத்தினார்.

இங்குள்ள லிட்டில் இந்தியா வணிகர்கள் சங்க அலுவலகத்தில் நடைபொற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

நாங்கள் இங்கு கடைகளுக்கு வாடகை , இதில் பணிபுரிகின்ற பணியாளர்களுக்கு சம்பளம் , வர்த்தக வரி ஆகியவைகள் செலுத்தி வருகிறோம்.

நடத்தப்படும் கார்னிவெல் நிகழ்வுகளில் சட்டவிரோத தொழிலாளர்களின் ஈடுபாடு , வரி செலுத்தப்படாத பொருட்களின் விற்பனை செய்யப் படுவதினால் பெரும் பாதிப்பை உள்நாட்டு  வணிகர்கள்  எதிர்நோக்கியுள்ளனர் என்றார்.

இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்துக் கொண்ட உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினர் முகமட் அராப்பாட்டிடம்  இந்த விவகாரத்தை கலா பாலசுப்பிரமணியம் நேரடியாக முன் வைத்தார் .

இது குறித்து கருத்துரைத்த முகமட் அராப்பாட் , இந்த விவகாரத்தை மாநில அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker