Latestஉலகம்

சிறார் பாலியல்: 200 கோடி டாலர் சொத்தை இழப்பார் மைக்கல் ஜேக்சன்?

வாஷிங்டன், மார்ச்.9- அண்மையில் வெளியாகி உலகெங்கிலும் உள்ள மைக்கல் ஜேக்சனின் ரசிகர்களை உலுக்கிய “லிவீங் நெவர்லண்ட்” என்ற ஆவணப் படத்தால் ஜேக்சனின் 200 கோடி டாலர் சொத்து கைவிட்டுப்போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இறந்த பிரபல பாடகர் மைக்கல் ஜேக்சன் தொடர்பில் தனியார் ஊடகம் ஒன்று அண்மையில் ‘லிவீங் நெவர்லண்ட்’ என்ற ஆவணப் படத்தை வெளியிட்டது.

அதில் மைக்கல் ஜேக்சன் சிறார்கள் மீதான ஈர்ப்பு மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இரு இளைஞர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தனர்.

அந்த ஆவணப்படமானது உலகெங்கிலும் உள்ள ஜேக்சன் ரசிகர்களை உலுக்கியதுடன் பிரிட்டன், கனடா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் முக்கிய வானொலிகளில் இவரது பாடல்களை ஒலிபரப்பக் கோரியும் போராட்டம் வலுத்தது.

இந்நிலையில் மைக்கேல் ஜேக்சனுக்கு சொந்தமான சுமார் 200 கோடி டாலர் சொத்து ஒன்றின் மூலம் வருவாய் கிடைத்து வருகிறது. அது மட்டுமின்றி அவரது பாடல்களை வெளியிடுவற்கான உரிமையை சோனி நிறுவனம் 287 மில்லியன் டாலருக்கு கைப்பற்றியது.

தற்போது மைக்கல் ஜேக்சனுக்கு எதிராக சிறார் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு வலுப் பெற்றுள்ளதால் இந்த 200 கோடி டாலர் மதிப்பிலான சொத்துக்கள் இழப்பு ஈடாக வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker