Latestமலேசியா

வர்த்தக கார்னிவெல்; அந்நியர்கள் 27 பேர் விசாரணைக்காக கைது!

சிரம்பான், மார்ச். 9- சிரம்பானில் நடத்தப்பட்ட ‘கார்னிவெல்’ வர்த்தக நிகழ்வில் ஈடுபட்ட அந்நிய வணிகர்கள் மற்றும் முறையான பயண தஸ்தாவேஜூகள் இல்லாதவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

குடிநுழைவு இலாகாவுடன் இணைந்து சிரம்பான் நகராண்மைக் கழகம் மேற்கொண்ட சோதனையில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று அந்த வர்த்தக கார்னிவெல் நிகழ்வில் வர்த்தகம் புரிந்த அன்னிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர்.

அந்த கைது நடவடிக்கை குறித்து கருத்துரைத்த சிரம்பான் சிறு தொழில் வணிகர்கள் சங்கத்தின் தலைவர் முரளி, இந்த நடவடிக்கையை சங்கம் வரவேற்கிறது என்று தெரிவித்தார்.

நாட்டில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வரும் இது போன்ற வர்த்தக ‘கார்னிவெல்’ நிகழ்வுகளால் உள் நாட்டு வியாபாரிகள் தொழில் செய்யமுடியாமல் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள் என்று பரவலாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்நாட்டில் அந்நிய வணிகர்கள் சட்டவிரோதமான முறையில் வாணிபத்தில் ஈடுபட்டு வருவதைக் கண்டித்து நேற்றை தினம் ஈப்போ லிட்டில் வணிகர்கள் சங்கமும் அறிக்கையை வெளியிட்டிருந்த்து.

இந்த பாதிப்பினால் கடந்த மூன்று ஆண்டுகளில் லிட்டில் இந்தியா வளாகத்தில் பல கடைகள் மூடப்பட்டது குறித்தும் சங்கம் கவலைத் தெரிவித்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker