Latestமலேசியா

ஆங்கிலப் புலமை: அதிகமான ஆசிரியர்களை பயிற்றுவிக்க கோரிக்கை

கோலாலம்பூர், மார்ச். 10- அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் போதிப்பதற்கு கூடுதலான ஆங்கிலப் புலமை கொண்ட ஆசிரியர்களைக் கல்வியமைச்சு பயிற்றுவிக்க வேண்டும் என்று தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இத்தகைய ஆங்கிலத் திறன் கொண்ட ஆசிரியர்கள் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்யக் கூடிய வகையில் இந்த பயிற்சி நடவடிக்கை அமையும்.

மேலும் குறிப்பிட்ட அந்த இரண்டு பாடங்களையும் ஆங்கிலத்தில் போதிப்பது என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்பவும் இந்த நடவடிக்கை அமையும் என்று சங்கத்தின் பொதுச் செயளாலர் ஹர்ரி டான் குவாட் ஹோக் சொன்னார்.

இவ்விரு பாடங்களையும் ஆங்கிலத்தில் போதிக்ககூடிய திறன் பெற்ற ஆசிரியர்கள் தேசிய அளவில் போதுமான எண்ணிக்கையில் இல்லை.

மேலும் பள்ளி முதல்வர்களும் ஆங்கிலத்தில் மிகச் சரளமாக உரையாடக்கூடிய திறன் பெற்றிருப்பதை கல்வியமைச்சு உறுதிப் படுத்துமேயானால் இந்தத் திட்டத்தை மிகச் சுமூகமாக மேற்கொள்வதற்கு வழிபிறக்கும் என்று அவர் சொன்னர்.

இருமொழிப் பாடத்திட்ட வாய்ப்பை பெற்றுள்ள பள்ளிகளின் தேவைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டியது அவசியம். அந்தத் திட்டத்தை மேற்கொள்ளும் பொறுப்பை பள்ளி நிரவாகங்களைன் தலையிலேயே சுமத்தி விடக் கூடாது என்று ஆசிரியர் பணியாளர் சங்கம் வலியுறுத்தியது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker