Latestஉலகம்

உலகின் வயதான கின்னஸ் சாதனை பாட்டி!

தோக்கியோ, மார்ச். 19- ஜப்பானை சேர்ந்த 116 வயதான பாட்டி உலகிலேயே மிகவும் வயதானவர் என்கிற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

தென் மேற்கு ஜப்பானில் புகுகோக்காவில் முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வரும் கேன் டனகா (116 வயது) உலகிலேயே மிகவும் வயதானவர் என ஆதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை கின்னஸ் சாதனை மையம் நேற்று அங்கீகரித்துள்ளது.

1903 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி, குடும்பத்தில் எட்டு குழந்தைகளில் ஏழாவது குழந்தையாக பிறந்தார் கேன். 1922 ஆம் ஆண்டில் ஹீடோயோ டானகாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். மற்றொரு குழந்தையை தத்தெடுத்து வளர்ந்தனர்.

தினமும் காலை 6 மணிக்கே எழும் பழக்கம் கொண்ட அவர் கணிதத்திலும் ஆர்வம் கொண்டவர். அதே சமயம் காப்பி மற்றும் பிற பானங்களும் விரும்பி குடிப்பவர். கின்னஸ் சான்றிதழுடன் வழங்கப்பட்ட சாக்லெட்டை சாப்பிட்டதுடன் ஒரே நாளில் 100 சாக்லெட் சாப்பிட ஆசை என்று கூறி அனைவரையும் வியக்க வைத்தார்.

இதற்கு முன்பாக உலகின் வயதான மூதாட்டி ஜப்பானைச் சேந்த சியோ பியாகோ 117 ஆவது வயதில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker