Latestஉலகம்

எத்தியோப்பியா விமானம் விபத்து: 157 பயணிகளும் உயிரிழந்தனர்?

அடிஸ் அபாபா, மார்ச். 10- எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் பயணம் செய்த 157 பேரும் உயிரிழந்திருக்கக் கூடும் என்று தொடக்கத் தகவல்கள் கூறுகின்றன.

எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் போயிங் 737 பயணிகள் விமானம் ஒன்று. இன்று காலை எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து கென்யாவின் நைரோபி நகருக்கு 149 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் புறப்பட்டுச் சென்றுள்ளது. இதில் 33 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இருந்தனர்.

அப்போது விமானமானது சரியாக உள்ளூர் நேரப்படி காலை 8.38 மணிக்கு அடிஸ் அபாபாவிலுள்ள போல் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானம், புறப்பட்ட அடுத்த 6 நிமிடங்களில் அதாவது 8.44 மணிக்கு கட்டுப்பாட்டு அறையின் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது. சுமார் 65 கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள பிஸோப்டு நகருக்கு விபத்துக்கு உள்ளானதாக தெரிய வந்துள்ளது.

இதனால் விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் விமானத்தின் உள்ளே இருந்த அனைவரும் பலியாகினர் என்று தொடக்கத் தகவல் கூறுகின்றன. மேலும் விமானம் விழுந்த பகுதிக்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker