Latestஉலகம்

மன்னார் புதைக் குழி எழும்புக் கூடுகள்: அமெரிக்க முடிவை ஏற்கிறோம்! – மனோ கணேசன்

கொழும்பு, மார்ச் 10- மன்னார் மனிதப் புதைக் குழியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் 500 வருடங்கள் பழமை வாய்ந்தவை என ஏற்றுக் கொள்வதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட கார்பன் பரிசோதனை அறிக்கைக்கு ஏற்ப மனிதப் புதைக் குழியில் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் 500 வருடங்கள் பழமை வாய்ந்தவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஏற்ப நோக்கும் போது நீதிமன்றத்தின் முடிவுகளே இறுதியானவை. ஆகவே அவற்றை ஏற்றுக்கொள்வதாக இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள  இலங்கை அமைச்சர் மனோ கணேசன் கூறினார்.

இதே வேளை மன்னார் மனிதப் புதைக்குழி தொடர்பான ஆய்வு மீண்டும் ஒரு முறை செய்யப்படவேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிவமோகன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker