Latestஇந்தியா

21 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல்: பரபரப்பில் தமிழகக் கட்சிகள்!

சென்னை, மார்ச். 10- நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும் சேர்த்து நடத்தப் படுகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு மேலும் அதிகரித்து உள்ளது.

அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி பிரச்னை காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனால், இவர்களின் தொகுதிகள் காலியாகி விட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் கலைஞர் கருணாநிதி மற்றும் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஆகியோர் காலமானதால் அந்தத் தொகுதிகளும் காலியாக உள்ளன. மேலும் ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணா ரெட்டி சிறைத் தண்டனை பெற்றதால் அவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அந்தத் தொகுதியும் காலியாக உள்ளது.

தமிழகத்தில் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் என்பது தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. எனவே தமிழக அரசியல் கட்சிகள் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பரபரப்புடன் குதிக்கத் தயாராகி வருகின்றன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker