Latestஇந்தியா

இடைத்தேர்தல்கள்:- ஆட்டம் காணுகிறது அதிமுக அரசு?

சென்னை, மார்ச்.11- தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் அதிமுக அரசுக்கு பாதகமாக அமைந்தால் எடப்பாடி பழனிச்சாமி அரசாங்கம் கவிழும் அபாயம் உள்ளது.

தமிழ் நாடு சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 213 ஆகவுள்ளது. சட்டப்பேரவையில் பெரும்பான்மை என்பது தற்போது உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் சரிபாதியுடன் ஒன்று கூடுதலாக இருக்க வேண்டும்.

அதன்படி, 214 உறுப்பினர்களை கொண்டுள்ள தற்போதைய பேரவையில் பெரும்பான்யை நிரூபிக்க 109 உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடி அரசுக்கு தேவையாக இருக்கிறது. ஆனால் ஆளும் அதிமுகவுக்கு ஆதரவாக சபாநாயகர் நீங்கலாக 108 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

திமுகவில் 88 உறுப்பினர்களும் , காங்கிரஸ் 8 எம்எல்ஏக்களும், இந்திய யூனியன் முலிம் லீக்கின் ஓர் உறுப்பினர் என திமுக கூட்டணியில் மொத்தம் 97 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இப்போது இல்லை என்பதால் மீதமுள்ள 18 தொகுதிகளுக்கும் முடிவு வந்தால் உறுப்பினர்களின் எண்ணிக்கை 231 ஆக இருக்கும். ஆக ஆட்சியமைக்க எடப்பாடி அரசுக்கு 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

இப்போது உள்ள 108 உறுப்பினர்களைத் தவிர 8 தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை அதிமுக தக்க வைக்க முடியும். ஆகையால் பெரும் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இடைத்தேர்தலை சமாளித்து ஆட்சியை தக்க வைப்பாரா என பெரும் கேள்விகளோடு காத்திருக்கின்றனர் தமிழக மக்கள்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker