Latestமலேசியா

ஒற்றுமையைப் பேண நடவடிக்கை வேண்டும்!- பேரரசர்

கோலாலம்பூர், மார்ச்.11 – ஒற்றுமைக்கான சுலோகங்களை விடுப்பதை விட, அதற்கு ஏதுவான பயனான காரியங்களை ஆற்ற வேண்டுமென பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாவுதின் வலியுறுத்தினார்.

பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் ஒற்றுமையை வலுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் உண்மையான, பயனுள்ள நடவடிக்கைகள் அவசியமாகும் என இன்று 14ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடரை தொடக்கி வைத்து உரையாற்றும்போது, பேரரசர் அவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனநாயக நாடாளுமன்றம் மற்றும் அரசியலமைப்பு வழியிலான அரச மரபு சார்ந்த பாரம்பரியத்துக்கு அனைத்துத் தரப்பினரும் மரியாதை தந்து, போற்றிப் பாதுகாக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் அதிகாரத்துவ சமயமாக இஸ்லாம் இருந்தாலும் மற்ற சமயங்களை அனுசரிக்க எந்தத் தடையும் இல்லை. மேலும், தேசிய மொழியான மலாய் மொழியின் மாண்பையும் பாதுக்கவும் வேண்டும்.

நாட்டின் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் பங்கம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை அவசியமென சுல்தான் அப்துல்லா வலியுறுத்தினார்.

சமூக ஊடகங்களைப் பற்றிக் குறிப்பிட்ட பேரரசர், பொதுமக்கள் அதனை பொறுப்பின்றி பயன்படுத்தி நாட்டின் ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்க வேண்டாமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

60 வயதை எட்டியிருக்கும் மலேசிய நாடாளுமன்றத்தின் மாண்பினைக் காக்கும் வகையில், அரசியலமைப்பு விதிகளைப் பேணிப் பாதுகாத்தும் தற்காக்கவும் வேண்டும்.

மக்களவை உறுப்பினர்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் பயனான வகையில் மக்களவை விவாதங்களைக் கண்ணியமாக நடத்தி, நாட்டின் மேம்பாட்டுக்கு உதவ வேண்டுமென பேரரசர் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker