Latestமலேசியா

கம்பாரில் புதிய மருத்துவமனை! – முயற்சிகள் தொடரும்!- Video

கம்பார், மார்ச். 11- கம்பார் நகரில் புதிய மருத்துமனை ஒன்றை உருவாக்க தாம் முயற்சி எடுக்கப் போவதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ. சிவநேசன் தெரிவித்தார்.

இங்குள்ள129 ஆண்டுகால பழமை  வாய்ந்த மருந்துவமனை தற்போதைய தேவைக்கு உகந்ததாக இல்லையென்றும் இவ்வட்டாரத்தில் மக்கள் தொகை  250,000ஆக உயர்ந்துள்ளது.


இந்நிலையில்   சகல வசதிகளையும் கொண்ட மருத்துவமனையின் அவசியத்தை குறிப்பிட்ட  கெரிஞ்சி சட்டமன்ற உறுப்பினர்  சோங் சி மின்னின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சிவநேசன் அது பற்றி ஆவன செய்வதாக உறுதியளித்தார்.


புதிய மருத்துவமனைக்கு அடையாளம் காணப்பட்ட இடம், பொருத்தமாக இல்லை என்பதால், வேறு இடங்கள் பரிந்துரைக்கப்படும் என கம்பார் மருத்துவமனைக்கு வருகை அளித்தபோது அவர் அதனைத் தெரிவித்தார்.

இதனிடையே யூத்தார் பல்கலைக் கழகம் மருத்துவமனை ஒன்றை நிர்மாணிக்கும்  திட்டம்,  வசதி குறைந்தோருக்கு எந்தப் பயனையும் கொண்டு வராது என்பதால்  இங்கு அரசு மருத்துவமனையை உருவாக்க அரசு அனுமதி தரவில்லை என்றும் சிவநேசன் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker