Latestசினிமா

அதிபரிடம் விருது: வேஷ்டியில் களமிறங்கிய பிரபுதேவா!

புதுடில்லி, மார்ச்.12- இந்திய அதிபர் மாளைகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவின் போது நடிகரும்- நடன இயக்குனருமான பிரபுதேவா தமக்கான விருதினைப் பெற பண்பாடு மாறாமல் வேஷ்டி-சட்டையில் களமிறங்கி கலக்கியுள்ளார்.

இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதிபர் மாளிகையில் 112 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அதிபர் ராம்நாத் கோவிந்த், துணை அதிபர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் திரையுலகை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு விருதினை பெற்றனர். குறிப்பாக மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருதும், பிரபுதேவா, பாடகர் சங்கர் மகாதேவன், டிரம்ப்ஸ் சிவமணி உள்ளிட்டோர்களுக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டன.

இதில் பத்மஸ்ரீ விருதை வாங்க நடிகர் பிரபுதேவா தமிழர்களின் பண்பாட்டு உடையான வேட்டி- சட்டை அணிந்து வந்தார். மேலும் தன்னுடைய தாய் தந்தையருடன் இவர் விருது எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker