Latestஉலகம்

கிம் ஜோங்கை மீண்டும் சந்திக்க தயார்! -டிரம்ப்

வாஷிங்டன், மார்ச்.12- அணு ஆயுதp பரவலை தடுக்க வட கொரியத் தலைவர் கிம் ஜோங் யுன்னுடன்  மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் டிரம்ப் தயாராக இருப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் நடந்த  முதல் உச்சநிலை மாநாடு மாநாட்டுக்கு பின், அமெரிக்க அதிபர் டிரம்பும்- வடகொரியா தலைவர் கிம் ஜோங் யுன்னும் கடந்த மாத இறுதியில் வியட்நாமில் 2 ஆவது முறையாக சந்தித்து பேசினர்.

ஆனால் எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.  இதனால் அதிருப்தி அடைந்த வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்துவதற்கான பணிகளில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அணு ஆயுதப் பரவலை தடுக்க கிம் ஜோங் யுன்னுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் டிரம்ப் தயாராக இருப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது இதனை அவர் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,- வியட்நாம் சந்திப்பின் போது டிரம்ப் பாதியிலேயே எழுந்து சென்றதற்கு பேச்சுவார்த்தை முறிந்ததாக பொருள் கிடையாது. அந்தச் சந்திப்பின் உடன்பாடு எட்டப்படாததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன என்றார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker