Latestமலேசியா

மாஸ் நிறுவனத்தை மூடுவதா? இல்லையா? அரசு ஆராய்கிறது- மகாதீர்.

கோலாலம்பூர்,மார்ச்,12- நஷ்டத்தில் இருக்கும் மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து பல்வேறு வாய்ப்புகள் வழிமுறைகள் தொடர்பாக அரசு ஆராய்ந்து வருகிறது. தேசிய விமான நிறுவனமான மாஸ் நிறுவனத்தை மூடுவதும் அத்தகைய வழிமுறைகளில் ஒன்றாக பரிசீலிக்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய போது பிரதமர் துன் மகாதீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேசிய விமான நிறுவனத்தை மூடுவது என்பது மிகக் கடுமையான ஒரு முடிவாகத் தான் இருக்கும் என்றார் அவர்.
அதனை மூடுவதா? அல்லது விற்று விடுவதா? அல்லது மறுமுதலீடு செய்வதா என பல்வேறு கோணங்களில் அரசாங்கம் ஆராய்கிறது என்று அவர் சொன்னார்.

மாஸ் விமான நிறுவனத்தை தொடர்ந்து நடத்தும் வகையில் இலாபகரமானதாக மாற்றுவதற்கு அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மூன்று ஆண்டுகால அவகாசம் முடிந்து விட்டது. அந்த இலக்கை அடைவதில் மாஸ் தோல்விகண்டு விட்டது என்று துன் மகாதீர் சொன்னார்.
இன்னும் சில ஆண்டுகள் காலம் கொடுக்கப்பட்டால் கூட மாஸ் நிறுவனம் மீட்சி பெறுவது சிரமம் என்று நிபுணர்களின் கருத்துக்களை ஊடகம் ஒன்று பிரசுரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker