Latestசினிமா

‘மீ-டூ’ விவகாரம்; நம்பிக்கை போய்விட்டது! -லெட்சுமி ராய்

சென்னை, மார்ச் 12- ‘மீ-டூ’ இயக்கம் வரவேற்கத்தக்கது. ஆனால் போகப்போக அதை தவறாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். அதன் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது நடிகை லட்சுமிராய் கூறினார்.

ஜெய், லட்சுமிராய், கேத்ரின் திரேசா ஆகியோர் நடித்துள்ள புதிய படம் நீயா-2. இப்படத்தை ஸ்ரீதர் தயாரித்துள்ளார். படம் விரைவில் திரைக்கு வர இருப்பதையொட்டி படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது லட்சுமிராய் கூறியதாவது:-

நான் சினிமாவுக்கு வந்து 14 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தியில் ஜூலி படத்தில் நடிக்க உடல் எடையை குறைக்கும்படி இயக்குனர் சொன்னதால் பால், சப்பாத்தி சாப்பிடுவதை நிறுத்தி அரிசி உணவுகளையும் உருளைக் கிழக்கையும் சாப்பிட்டு உடற்பயிற்சிகள் செய்து 75 கிலோவாக இருந்த எடையை 59 கிலோவாக குறைத்தேன்.

நான் யாருக்கும் பயப்படமாட்டேன். எனது வாழ்க்கையில் நிறைய முறை காதல் வந்து போய் இருக்கிறது. இருப்பினும் நான் காதல் திருமணம் தான் செய்து கொள்வேன். நீயா -2 சிறப்பாக வந்துள்ளது. இயக்குனர் எல் சுரேஷ் கடுமையாக உழைத்து இப்படத்தை எடுத்துள்ளார்.

ஜெய்- அஞ்சலி இருவரும் எனக்கு நண்பர்கள். அவர்கள் காதல் ஒரு படத்திலேயே முடிந்து விட்டது. மீ-டூ இயக்கம் கூட வரவேற்கத்தக்கது தான். வரவேற்கத்தக்கது. ஆனால் சிலர் தவறாக பயன்படுத்தி விட்டதால் அதன் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. இவ்வாறு லட்சுமிராய் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker