Latestமலேசியா

ரந்தாவ் தேர்தல்: பக்காத்தான் சின்னத்தில் ஶ்ரீராம் போட்டி! – மகாதீர்

கோலாலம்பூர், மார்ச் 12 – ரந்தாவ் இடைத்தேர்தலில் டாக்டர் ஶ்ரீராம் பக்காத்தான் சின்னத்தில் போட்டியிடுவார் என துன் மகாதீர் தெரிவித்தார்.

கடன் பிரச்னையில் அவர் திவாலானவராக இருந்தாலும், அவர் இடைத்தேர்தலில் போட்டியிட முடியும் எனக் குறிப்பிட்டார்.

திவாலானவர் தமது கடனத் திருப்பிச் செலுத்தத் தவறினால் மட்டுமே வேட்பாளராக இருக்க முடியாது என நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடன் மகாதீர் தெரிவித்தார்.

கடந்த மார்ச் 9ஆம் தேதி, பிகேஆரின் துணைத் தலைமைச் செயலாளர் டாக்டர் எட்மண்ட் சந்தாரா குமார், தாம் கொடுத்த ரிம. 62,000 கடனை ஶ்ரீராம் திருப்பித் செலுத்தவில்லை எனப் போலீசில் புகார் தெரிவித்திருந்தார்.

அதற்குப் பதிலளித்த ஶ்ரீராம், அந்தக் கடனை தாம் முழுமையாகச் செலுத்தியுள்ளதாகவும் அதற்கான ஆதாரத்தை தாம் பிகேஆர் தலைமைத்துவத்திடம் ஒப்படைத்து விட்டதாகத் தெரிவித்திருந்தார்.

இடைத்தேர்தலில் போட்டியிடும் வேளையில் தமது பெயருக்குக் களங்கத்தை உருவாக்கும் நோக்கத்தில் தேர்தல் தருணத்தில் இப்பிரச்சினை வெளியாக்கப் பட்டுள்ளதாக ஶ்ரீராம் சுட்டிக் காட்டினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker