Latestமலேசியா

HRDF நியமனங்களில் முறைகேடா? -மறுத்தார் குலா

கோலாலம்பூர், மார்ச் 12 – மனிதவள மேம்பாட்டு நிதியத்தில் (HRDF) பிரபல நிறுவனங்களின் முன்னாள் அதிகாரிகளைச் சேர்த்திருப்பதில் எந்தவொரு முறைகேடும் இல்லை என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்துள்ளார்.

அந்த நிதியத்தில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோரைத் தமக்குத் தெரியும் என்றும் சிலர் மிகையான வருமானத்தை விட்டு, தமது வேண்டுகோளுக்கு ஏற்ப நியமனத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தமக்கு வேண்டியவர்களை அந்த நிதியத்தில் குலசேகரன் சேர்த்திருப்பதாகவும் தமக்கு நன்கு அறிமுகமான வழக்கறிஞர் நிறுவனத்திற்கு எச்ஆர்டிஎஃப் -க்குச் சேர வேண்டிய நிலுவையை வசூலிக்கும் பொறுப்பை ஒப்படைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுப்பப் பட்டிருந்தன.

இப்படிப்பட்ட்ட குற்றச்சாட்டுக்களை எழுப்பி இருப்பவர்கள் தங்களுக்கு வாய்ப்புக் கிட்டவில்லை என்பதற்காக அந்தக் குற்றச்சாட்டுகளை எழுப்பி இருக்கின்றனர்.

நியமிக்கப்பட்டவர்களின் முன் அனுபவமும் நேர்மையும்தான் இதில் முக்கியம். அவர்கள் தேசிய சேவையாகக் கருதியே அப்பதவியை ஏற்றுக் கொண்டுள்ளனர். அதனால் எச்ஆர்டிஎஃப்-க்கு எந்த இழப்பும் இல்லை எனவும் குலசேகரன் குறிப்பிட்டார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker