Latestசினிமா

அடிதடியில் இறங்கிய நடிகர் விமல் தலைமறைவா?

சென்னை, மார்ச். 13- குடிப்போதையில் கன்னட நடிகர் அபிஷேக்கை தாக்கிய சம்பவத்தில் தன்னை  போலீசார் வலைவீசித்  வருவதால் தனது விட்டிலிருந்து தலைமறைவாகி உள்ளார் நடிகர் விமல்.  அவரது இருப்பிடத்தை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர் போலீசார்.

பெங்களூரைச் சேர்ந்தவர் அபிஷேக். கன்னட நடிகரான இவர் தமிழில் “அவன் அவள் அது” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதற்காக சென்னையில் விருகம்பாக்கம் அடுக்கு மாடி வீட்டில் தங்கியுள்ளார்.

இரு தினங்களுக்கு முன்பு அக்குடியிருப்பின் நுழைவாயில் பகுதியில் அபிஷேக் அமர்ந்திருந்த போது நடிகர் விமல் தனது நண்பர்கள் 4 பேருடன் மதுபோதையில் அங்கு சென்றதாக கூறப்படுகிறது.

அபிஷேக்கை, குடியிருப்பின் வரவேற்பு ஊழியர் என நினைத்து விமல் அறை கேட்டதாகவும் இதனால் அபிஷேக் கோபமுற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்படவே நடிகர் விமல் தனது நண்பர்களுடன் சேரந்து கன்னட நடிகர் அபிஷேக்கை அடித்ததாகவும் சொல்லப்படுகிறது. காயம் பட்ட அபிஷேக் சாலி கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் தாக்குதல் தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் “ஆபாசமாக திட்டுதல் என்ற பிரிவின் கீழ்” நடிகர் விமல் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் விமல் படப்பிடிப்பைக் காரணம் காட்டி வெளியூருக்குத் தப்பிச் சென்று விட்டதாகவும் தெரிகிறது. விமலைக் கைது செய்து விசாரிப்பதற்காக விருகம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker