Latestமலேசியா

நச்சு வாயு: ஜோகூரில் 34 பள்ளிகள் மூடப்பட்டன! காரணமான மூவர் கைது!

ஜோகூர்பாரு, மார்ச்.13- நச்சு வாய்வின் பாதிப்பு காரணமாக பாசீர் கூடாங் பகுதியில் இதுவரை 34 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நேற்று வரை 9 பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் இன்று மேலும் 25 பள்ளிகள் மூடப்பட்டதாக கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் தெரிவித்துள்ளார்.

இங்குள்ள சுங்கை கிம் கிம் ஆற்றில் இரசாயன நச்சுக் கழிவுகள்   கொட்டப் பட்டதால் அதன் நச்சுத்தன்மை காற்றில் பரவி அப்பகுதியிலுள்ள பள்ளி மாணவர்கள் வாந்தி, மயக்கத்திற்கு உள்ளானதால் உடனடியாக பள்ளிகள் மூடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 500 பேர் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். .இந்தப் பள்ளிகள் மூடப்பட்டதில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் மாணவர்கள் வரை பள்ளிகளுக்குச் செல்வது பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஆற்றில் நச்சுக் கழிவைக் கொட்டியதில் சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பப்படும் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மூவரும் இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படலாம் என எரிசக்தி, அறிவியல், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான துறை அமைச்சர் இயோ பீ யின் தெரிவித்தார்.

இப்பகுதிகளிலுள்ள சட்டவிரோத டயர் மறு பயனீடு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்ட நச்சுக் கழிவுகள் இந்த ஆற்றுப் பகுதியில் கொட்டப் பட்டதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட மூவரும் வெவ்வேறு தொழிற்சாலைகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

இந்தத் தொழிற்சாலைகளில் எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகளும் ஆற்றில் கொட்டப்பட்ட கழிவுகளின் மாதிரிகளும் ஒரே மாதிரியானவையா? என்பதைக் கண்டறிய அவை இராசாயனத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

1974ஆம் ஆண்டின் சுற்றுச் சூழல் தரச் சட்டத்தின் கீழ் இவர்கள் மூவரும் குற்றஞ்சாட்டப் படலாம் என்றும் குற்றச்சாட்டு நிருபிக்கப் பட்டால் கூடுதல் பட்சம் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை, 5 லட்சம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker