Latestமலேசியா

நிர்வாணப் படங்கள்: இளம்பெண்ணை தொடரும் அவஸ்தை!

ஈப்போ, மார்ச். 13- இளவயதில் தனது காதலன் வேண்டுகோளுக்கு இணங்க தன்னுடைய நிர்வாணப் படங்களை அனுப்பிய இளம் பெண் அவர் தற்போது பெரும் சிக்கலில் அவதிப்படுகிறார்.

கோப்பெங்கில் 15 வயதாக இருந்தபோது, ஆன் என்றழைக்கப்படும் மாணவி தமது ஆண் நண்பரின் நெருக்குதலுக்குப் பணிந்து, தமது நிர்வாணப் படங்களையும் வீடியோ காட்சிகளையும் அனுப்பி வைத்துள்ளார் அந்தப் பெண்.

அந்த நபர் அவற்றைத் தமது நண்பர்களிடையே பரிமாறி பிரச்சினையை ஏற்படுத்தியதால், அந்தப் வேறு பள்ளிக்கு மாறி அந்த நண்பருடனான உறவை முறித்துக் கொண்டுள்ளார்.

தற்போது சிங்கப்பூரில் வேலை செய்து வரும் 20 வயதான அந்தப் பெண், அநாமதேய நபர் ஒருவர் தம்மை பலமுறை தொடர்பு கொண்டு நிர்வாணப் படங்களை அனுப்பி வைக்க வேண்டுமென அச்சுறுத்துவதாக மசீச பொது சேவை மற்றும் புகார் பிரிவிடம் முறையிட்டார்.

தமது தொலைபேசி எண்ணையும் ஊடகக் கணக்கையும் மாற்றிய பின்னரும், அடையாளம் தெரியாத நபர் தமக்குத் தொல்லை கொடுத்து வருவதாகக் குறிப்பிட்டார். அதில் தமது முன்னாள் ஆண் நண்பர் பின்னால் இருந்து செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker