Latestஉலகம்

பிரிட்டனில் 5 வெடிகுண்டு பைகள்: ஐ.ஆர்.ஏ. படையின் சதி?

லண்டன், மார்ச். 13- பிரிட்டனில் முக்கிய நகரங்களில் கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்ட 4 வெடிகுண்டுகள் கொண்ட  பைகளை வைத்தது தாங்களே என ஐரிஷ் குடியரசு விடுதலை இராணுவம் என்ற அமைப்பு  அறிவித்துள்ளது.

பிரிட்டனில்  ஹீத்ரோ விமான நிலையம், லண்டன் சிட்டி விமான நிலையம் மற்றும் வாட்டர்லூ ரயில் நிலையம் ஆகிய இடங்களில் 2 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து 3 வெடிகுண்டு பைகள் கண்டுப் பிடிக்கப்பட்டன.

இந்தச் சம்பவமானது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஆயுதம் ஏந்திய போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு தீவிரமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதற்கு அடுத்த நாள் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் அதே போன்ற வெடிகுண்டு பை ஒன்று போலீசாரால் கண்டுபிடிக்கப் பட்டது. இந்த பைகள் அனைத்தும் அயர்லாந்து அரசின்  இதய வடிவிலான தபால் முத்திரைகளைக் கொண்டிருந்தன. இதனை அறிந்த அயர்லாந்து போலீஸ் அதிகாரிகள் பிரிட்டன் போலீசாருக்கு உதவ முன்வந்தனர்.

இந்நிலையில் பெல்பாஸ்ட் நகரைதலமாகக் கொண்ட செய்தித் தாளான ‘ஐரிஷ் நியூஸ்’ ஓர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.  ஐஆர்ஏ எனப்படும் ஐரிஷ் குடியரசு இராணுவம் இந்த வெடி குண்டுப் பைகளுக்கு பொறுப்பேற்றுள்ளது.

மொத்தம் 5 வெடிகுண்டுகள் கொண்ட பைகளை பிரிட்டனுக்கு அனுப்பியதாக அது ஒப்புக் கொண்டுள்ளது.  இதில் 5ஆவது வெடி குண்டு பை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க  போலீசார் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker