Latestமலேசியா

இளைஞர்களுக்கு இரவில் ஊரடங்கு இப்போதைக்கு இல்லை – வான் அஸிஸா

கோலாலம்பூர், மார்ச். 14- 18 வயதுக்கும் குறைவான இளைஞர்களுக்கு இரவில் ஊரடங்கு விதிக்கும் திட்டம் தற்போதைக்கு அமல்படுத்தும் எண்ணம் இல்லையென துணைப் பிரதமர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் மக்களவையில் தெரிவித்தார்.

பல்வேறு காரணங்களின் அடிப்படையில் அத்திட்டத்தை தற்போதைக்கு அமல்படுத்த தேவையில்லை என முடிவெடுக்கப் பட்டதாக வங்சா மாஜு பக்காத்தான் உறுப்பினர் டான் யீ கியூ எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போது, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பெற்றோர் இரவில் வேலை செய்வதால் பிள்ளைகளைக் கண்காணிக்க முடியாமை, பிள்ளைகள் சிறப்பு வகுப்புகளுக்கும் சமய வகுப்புகளுக்கும் செல்லுதல், குடும்பத்துக்கு உதவும் நோக்கில் இளைஞர்கள் இரவில் வேலை செய்தல் போன்ற காரணங்கள் ஆராயப்பட்டதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

குடும்பத்தில் அதிகமானோர் இருப்பதால், அசெளகரியம் இல்லாமை மற்றும் நாட்டின் சீதோஸ்ணம் உகந்ததாக இருப்பதால் மலேசிய இளைஞர்கள் இரவில் வெளியே செல்ல விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker