Latestஉலகம்

உலகத் திறன் போட்டி: சென்னை சிறுவன் அபார வெற்றி! மில்லியன் டாலர் பரிசு! -(Video)

நியூயார்க், மார்ச்.14- அமெரிக்காவில் நடந்த ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ (The World Best) திறன் போட்டியில் சென்னையைச் சேர்ந்த சிறுவன் லிடியன் நாதஸ்வரம் தனது இரு கைகளாலும் இரு பியோனோக்களை வாசித்து அபார வெற்றி பெற்றுள்ளார். ஒரு மில்லியன் டாலர் பரிசை அவர் தட்டிச் சென்றார்.

அமெரிக்காவில் நடந்த தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் (The World Best) தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போட்டியில் சென்னையை சேர்ந்த 13 வயது சிறுவன் லிடியன் நாதஸ்வரம் கலந்து கொண்டார்.

அவர் அந்த போட்டியில் அதிவேகமாக பியானோ வாசித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த வீடியோவை பார்த்து வியக்காதவர்களே இல்லை.

சராசரி மனிதர்களை விட இரண்டு மடங்கு வேகமாக லிடியன் பியானோ வாசித்ததை பார்த்து இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மானே அசந்துவிட்டார்.

தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்றுள்ள லிடியன், 14 இசைக் கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர்

இவர் ஏற்கனவே பல்வேறு விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிட்த்தக்கது. இறுதிச் சுற்றில் லிடியன் இரண்டு கைகளால் இரண்டு பியானோக்களை வாசித்து அசத்தினார்.

இந்தப் போட்டியில், லிடியன் நாதஸ்வரத்தின் பியானோ திறமைக்கு எதிராக இறுதிச் சுற்றில் போட்டியிட்டது தென் கொரியாவைச் சேர்ந்த தேக்குவாண்டோ குழு.

குக்கிவோன் என்ற இந்தக் தேக்குவாண்டோ குழு, தங்களின் தற்காப்பு திறனைக் காட்டினர். எனினும் இறுதியில் நடுவர்களை கவர்ந்து வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார் லிடியன் நாதஸ்வரம்.

இதற்கிடையே, இசைப்புயல் ஆ.ஆர். ரஹ்மான், மற்றும் பிரபல நடிகர்கள் மாதவன், சூர்யா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் லிடியனுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker