Latestமலேசியா

எஸ்.பி.எம். தேர்வு: பேராவில் இந்திய மாணவர்களின் சாதனை!

ஈப்போ, மார்ச். 14- நாடு தழுவிய அளவிலான எஸ்.பி.எம். தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேராவில் இந்திய மாணவர்கள் பலர் சாதனைப் படைத்துள்ளனர்.

அந்த வகையில் 99 விழுக்காடு இந்திய மாணவிகளைக் கொண்ட இடைநிலைப் பள்ளியான ஸ்ரீபுத்ரி பள்ளித் தொடர்ந்து சிறந்த மதிப்பெண்களைப் பதிவு செய்துள்ளது.

அதில் ச. ஜஸ்வின் 11-ஏ பெற்று இப்பள்ளியில் சிறந்த மாணவருக்குரிய சிறப்பைப் பெற்றார். மேலும் எல் .சார்மிளா 10-ஏ பெற்றார். ஏ.எஸ். சாரணி, கே.கணேஸ்வரி, தி.ஷார்மிளா ஆகிய மூவரும் முறையே 8 -ஏ பெற்றனர் .

இங்கு சுங்கைப் பாரி வழியில் உள்ள ஆண்கள் இடை நிலைப் பள்ளியிலும் 99 விழுக்காடு இந்திய மாணவர்கள் கல்வியை மேற்கண்டு வருகிறார்கள்.

எஸ்.பி.எம். தேர்வு எழுதிய மாணவர்களில் த.அறிவழகன் 11-ஏ பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் பி.பிரவின், பல்தீப் 10- ஏ பெற்ற வேளையில் பல மாணவர்கள் சிறந்த மதிப் பெண்களை பெற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இப்பள்ளியின் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் ஆசிரியர்கள் வழங்கி வரும் சிறந்த சேவையைப் பள்ளியின் பெற்றோர் -ஆசிரியர் சங்கத் தலைவர் சேகர் நாராயணன் பாராட்டினார் .

இதனிடையே இங்குள்ள செயிண்ட் மைக்கல் இடை நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய செந்தில் நாதன் ஜெயபாலன் 10-ஏ பெற்றார். அதில் ஆறு பாடங்களில் 6-ஏ பிளாஸ் பெற்றுள்ளார். இவர் இப்பள்ளியின் சிறந்த மாணவர்களில் ஒருவராகத் தேர்வு பெற்றார்.

சுங்கை சிப்புட்டில், அதிகமாக இந்திய மாணவர்களைக் கொண்ட பள்ளியான டத்தோ ஹாஜி அப்துல் வஹாப் இடை நிலைப் பள்ளி மாணவர்களும் சிறந்த தேர்ச்சிகளைப் பெற்றிருக்கின்றனர். அதில் ஜி.கவினேஷ் நாயர் 12 – ஏ பெற்றார். மேலும் பவித்ரா சத்திய சீலன் 10 -ஏ பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker