Latestமலேசியா

கடையில் திருட்டு: பாட்டி, மருமகள், பேரப் பிள்ளைகள் மீது குற்றச்சாட்டு!

பத்துகாஜா, மார்ச். 14- திருட்டு மற்றும் திருட்டுப் பொருள்களை வைத்திருந்தது தொடர்பான சந்தேகத்தின்பேரில் 60 வயது பாட்டி உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் முகம்மட் பில்த்ரி முன்னிலையில் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை இவர்கள் மறுத்தனர். பாட்டி நீலா, மருமகள் இந்திரா (வயது 39), பேரப் பிள்ளையான துரைராஜ் (வயது 20) மற்றும் ஒரு பேரப்பிள்ளையான 17 வயதுச் சிறுவன் ஆகியோர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

பத்து காஜா, தாமான் பூசிங் ஹிஜாவ், லாலுவான் ஹிஜாவிலுள்ள 99 ஸ்பீட் மார்ட்டில் 900 ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு பொருள்களை கடந்த வெள்ளிக் கிழமையன்று மாலை 5 மணிக்கும் 6.30 மணிக்கும் இடையே திருடியதாக இவர்களுக்கு எதிராக முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குற்றவியல் சட்டத்தின் 380ஆவது பிரிவின் கீழ் கூடுதல் பட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

அடுத்து அதே நாளில் டி. எஃப் வேல்யூ மார்ட்டின் விலை டேக்கு சாதனத்துடன் பல்வேறு உடைகளை தங்கள் வசம் வைத்திருந்ததாக அவர்கள் மீது இரண்டாவது குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker