Latestமலேசியா

குறைந்தபட்ச சம்பளம்: என்னால் மாற்ற முடியாது! -குலசேகரன்

கோலாலம்பூர், மார்ச் 14 – நாட்டில் அமலில் இருக்கும் குறைந்தபட்ச சம்பளத்தைத் தன்னிச்சையாக மாற்ற முடியாது என்றும் அந்த உரிமை தமக்குத் தரப்படவில்லை என்றும் மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.

தொழிலாளர் சம்பளத் திட்டத்தில் பல தரப்பாரின் பரிந்துரையை ஆராய்ந்த பின்னர், தேசிய சம்பள ஆலோசனை மன்றம் பரிந்துரைத்து, மக்களவையின் அங்கீகாரத்தை பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், ரிம. 1,500ஐ குறைந்தபட்ச சம்பளமாக நிலைநிறுத்த பக்காத்தான் முனையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அரசால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச சம்பளத்தை அனுசரிக்காதவர்கள்  மீது நடவடிக்கை நிச்சயம் என்றும் அந்தச் சம்பளத்தை விட கூடுதலாகத் தருவதற்கு தடையேதும் இல்லை எனவும் குலசேகரன் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker