Latestஇந்தியா

சிங்கமென கர்ஜித்த விஜயகாந்த்: சைகையில் பேசும் நிலை! தொண்டர்கள் அதிர்ச்சி!

சென்னை, மார்ச்.14- நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தோரிடம் விஜயகாந்த சைகையில் கேள்வி எழுப்பியதால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து தேமுதிக போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் சென்னையிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது.

புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பமனு அளித்த 300க்கும் மேற்பட்டோர் நேர்காணலில் பங்கேற்றனர். அவர்களை ஒரே இடத்தில் மொத்தமாக அமர வைத்து விஜயகாந்த் நேர்காணல் நடத்தினார்.

‘தேர்தலில் நின்றால் எவ்வளவு செலவு செய்வீர்கள்?’ என ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் தூக்கி சில்லரையை சுண்டுவது போல செய்கைக் காட்டி விஜயகாந்த் கேள்வி எழுப்பினார். அதற்கு விருப்ப மனு அளித்தவர்கள் பதில் அளித்தனர். மற்றபடி விஜயகாந்த் வாய் திறந்து எதுவும் பேசவில்லை.

சிலரை பார்த்து விஜயகாந்த் ஏதோ ஆர்வமுடன் பேச முயற்சித்தார். ஆனால் விஜயகாந்த் பேசியதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் நேர்காணலில் பங்கேற்ற கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அமெரிக்காவில் 60 நாள்கள் சிகிச்சைப் பெற்று சில நாள்களுக்கு முன் சென்னை திரும்பினார் விஜயகாந்த். உடல்நலம் தேறி வருகிறார். பிரசாரத்தில் பங்கேற்பார் என அவரது மனைவி பிரேமலதா கூறி வருகிறார்.

ஆனால் நேற்று நடந்த நேர்காணலின் போது விஜயகாந்தால் பேச முடியவில்லை. சைகை மொழியிலேயே பேசினார். இதைப் பார்க்கும் போது விஜயகாந்த் முழுமையாக உடல்நலம் தேறியதாக தெரியவில்லை. எனவே தேர்தல் பிரசாரத்தில் அவர் ஈடுபட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker