Latestமலேசியா

ஜோங் நாம் கொலை: வியட்னாம் பெண்ணை விடுவிக்க முடியாது! -சட்டத் துறை

கோலாலம்பூர், மார்ச். 14 – கிம் ஜோங் நாம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வியட்னாமிய பெண் டோன் தி ஹுவோங்கின் வழக்கை மீட்டுக் கொள்ள முடியாது என சட்டத் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

அண்மையில் அவரோடு குற்றம் சாட்டப்பட்டிருந்த இந்தோனேசியாவின் சித்தி அயிஷாவை காரணம் எதுவும் கூறாமல், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து டோனை விடுவிக்க கோரிக்கை விடப்பட்டிருந்தது.

டோனின் வழக்கறிஞர் ஷிஷாம் தே போ தீக், சித்தியும் டோனும் குற்றத்தை மறுத்து தாங்கள் அந்தக் கொலையில் பலிகடா ஆக்கப்பட்டதாகச் சாதித்து வந்ததாகவும், சித்தியை விடுவித்து டோனின் வழக்கை நடத்துவது பாரபட்சமானது என்றும் இது நீதி முறைமைக்கு ஏற்றதல்லவென்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, நீதிமன்றம் டோனுக்கு கருணை காட்டி அவரையும் வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker