Latestஇந்தியா

தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலினே! -ராகுல் அதிரடி

சென்னை மார்ச்.14- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விரைவில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்வார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அதிரடியாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நாகர்கோவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் அமைந்திருக்கும் – திமுக கூட்டணி மக்களுக்கான கூட்டணி. பிரதமர் மோடி தமிழகத்தின் மொழி, கலாச்சாரம், வாழ்வாதாரத்திற்கு எதிரான நிலையை கொண்டுள்ளார்.
தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான் என்று நான் உறுதியாகச் சொல்கிறேன் என்று ராகுல்காந்தி அதிரடியாக குறிப்பிட்டார்.

அடுத்த மாதம் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்களின் உரிமை குரல் ஒலிக்கும். தமிழகத்தில் இன்று நடப்பது மோடியால் ஆட்டி வைக்க்கப்படும் கைப்பாவை ஆட்சி என  ராகுல் கடுமையாக விமர்சித்தார்.

ஒவ்வொரு மாநிலங்களுக்கும் நெருக்கடியை கொடுத்து ஆட்சியை அடக்க முயற்சி செய்கிறார் மோடி. எங்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் தமிழகத்தில் அது நடக்காது. தமிழக மக்கள் அடக்கி ஆளுவதை அங்கீகரிக்க மாட்டர்கள்.

ஒரு பக்கம் பணக்காரர்கள் சொகுசாக வாழ்கிறார்கள். மறு பக்கம் விவசாயிகள் வருமானமின்றியும் இளைஞர்கள் வேலையின்றியும் கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள் என ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker